நூல்கள்›புறநானூறு›பாடல் 2116

பாடல் 2116

தென் குமரி, வட பெருங்கல்,

குண குட கடலா வெல்லை,

குன்று, மலை, காடு, நாடு

ஒன்று பட்டு வழி மொழியக்,

கொடிது கடிந்து, கோல் திருத்திப், . . . .

படுவது உண்டு, பகல் ஆற்றி,

இனிது உருண்ட சுடர் நேமி

முழுது ஆண்டோர் வழி காவல!

குலை இறைஞ்சிய கோள் தாழை

அகல் வயல், மலை வேலி, . . . .

நிலவு மணல் வியன் கானல்,

தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்,

தண் தொண்டியோர் அடு பொருந!

மாப் பயம்பின் பொறை போற்றாது,

நீடு குழி அகப் பட்ட . . . .

பீடு உடைய எறுழ் முன்பின்

கோடு முற்றிய கொல் களிறு,

நிலை கலங்கக் குழி கொன்று,

கிளை புகலத் தலைக்கூடி யாங்கு

நீ பட்ட அரு முன்பின், . . . .

பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப்,

பிறிது சென்று, மலர் தாயத்துப்

பலர் நாப்பண் மீக் கூறலின்,

உண் டாகிய உயர் மண்ணும்,

சென்று பட்ட விழுக் கலனும், . . . .

பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின்எனவும்,

ஏந்து கொடி இறைப் புரிசை,

வீங்கு சிறை, வியல் அருப்பம்,

இழந்து வைகுதும், இனிநாம்; இவன்

உடன்று நோக்கினன், பெரிது எனவும், . . . .

வேற்று அரசு பணி தொடங்குநின்

ஆற்ற லொடு புகழ் ஏத்திக்,

காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய

மழையென மருளும் பல் தோல், மலையெனத்

தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை, . . . .

உடலுநர் உட்க வீங்கிக், கடலென

வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது

கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப,

இடியென முழங்கு முரசின்,

வரையா ஈகைக் குடவர் கோவே! . . . .

யானையும் வேந்தனும்!

← பாடல் 2115பாடல் 2117 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்