நூல்கள்›புறநானூறு›பாடல் 2114

பாடல் 2114

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்,

பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;

புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்,

வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத் . . . .

தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;

துளங்கு இயலாற், பணை எருத்தின்,

பா வடியாற், செறல் நோக்கின்,

ஒளிறு மருப்பின் களிறு அவர

காப் புடைய கயம் படியினை; . . . .

அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,

விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு

நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்

ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்,

நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய, . . . .

வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்

நற் பனுவல் நால் வேதத்து

அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை

நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்

வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, . . . .

யூபம் நட்ட வியன்களம் பலகொல்?

யாபல கொல்லோ? பெரும! வார் உற்று

விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்

பாடினி பாடும் வஞ்சிக்கு

நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே . . . .

எதனிற் சிறந்தாய்?

← பாடல் 2113பாடல் 2115 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்