நூல்கள்›புறநானூறு›பாடல் 2112

பாடல் 2112

இவன் யார்? என்குவை ஆயின், இவனே,

புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,

எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,

மறலி அன்ன களிற்றுமிசை யோனே;

களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், . . . .

பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,

சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப,

மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே;

நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!

பழன மஞ்ஞை உகுத்த பீலி . . . .

கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,

கொழுமீன், விளைந்த கள்ளின்,

விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

நோயின்றிச் செல்க!

← பாடல் 2111பாடல் 2113 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்