நூல்கள்›அகநானூறு›பாடல் 2092

பாடல் 2092

உலோச்சனார்

கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும்,

வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும்,

இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும்,

தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர்

அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு . . . .

செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்!

செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று,

தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்

எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும்,

காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ? . . . .

உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே;

குப்பை வெண் மணற் குவவுமிசையானும்,

எக்கர்த் தாழை மடல்வயினானும்,

ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு,

சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த . . . .

கடுஞ் செலல் கொடுந் திமில் போல,

நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே!

நித்திலக் கோவை

← பாடல் 2091பாடல் 2093 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்