நூல்கள்›கலித்தொகை›பாடல் 1851

பாடல் 1851

'கோதை ஆயமும் அன்னையும் அறிவுற,

போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப,

காதல் செய்து அருளாது துறந்தார்மாட்டு, ஏது இன்றி,

சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை;

பலவும் நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை; . . . .

அலவலை உடையை' என்றி தோழீ!

கேள், இனி:

மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து, அவன்

காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,

பேணி அவன் சிறிது அளித்தக்கால், என் . . . .

நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்;

இருள் உறழ் இருங் கூந்தல் மகளிரோடு அமைந்து, அவன்

தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,

அருளி அவன் சிறிது அளித்தக்கால், என்

மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்; . . . .

ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து, அவன்

உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,

புல்லி அவன் சிறிது அளித்தக்கால், என்

அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்;

அதனால், . . . .

யாம நடு நாள் துயில் கொண்டு ஒளித்த

காம நோயின் கழீஇய நெஞ்சம்

தான் அவர்பால் பட்டதாயின்,

நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே.

நெய்தற் கலி

← பாடல் 1850பாடல் 1852 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்