நூல்கள்›கலித்தொகை›பாடல் 1811

பாடல் 1811

ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு,

காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை

பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை;

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு

புக்க வழி எல்லாம் கூறு; . . . .

கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்

காயாமை வேண்டுவல், யான்!

காயேம்.

மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்

அடக்கம் இல் போழ்தின்கண், தந்தை காமுற்ற . . . .

தொடக்கத்துத் தாயுழைப் புக்காற்கு, அவளும்

மருப்புப் பூண் கையுறையாக அணிந்து,

'பெருமான், நகைமுகம் காட்டு!' என்பாள் கண்ணீர்

சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,

வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு, அவளும் . . . .

மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,

முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,

'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று,

வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,

ஆங்கே, 'அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் . . . .

பெருமான் பரத்தைமை ஒவ்வாதி' என்றாள்;

அவட்கு இனிதாகி விடுத்தனன் போகித்

தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்

புலத் தகைப் புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு

கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? எல்லா! . . . .

வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்

பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே,

தொடியும் உகிரும் படையாக நுந்தை

கடியுடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,

வடுவும் குறித்தாங்கே செய்யும். விடு, இனி; . . . .

அன்ன பிறவும், பெருமான் அவள்வயின்

துன்னுதல் ஓம்பி, திறவது இல் முன்னி, நீ

ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்

கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;

அமைந்தது, இனி நின் தொழில். . . . .

மருதக் கலி

← பாடல் 1810பாடல் 1812 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்