நூல்கள்›கலித்தொகை›பாடல் 1796

பாடல் 1796

கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,

சீர் முற்றி, புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம்

தார் முற்றியது போல, தகை பூத்த வையை தன்

நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார்

போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்; . . . .

நலத்தகை, எழில் உண்கண் நல்லார் தம் கோதையால்

அலைத்த, புண், வடு, காட்டி, அன்பு இன்றி வரின் எல்லா!

புலப்பேன் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,

கலப்பேன் என்னும், இக் கையறு நெஞ்சே;

கோடு எழில் அகல் அல்குற் கொடி அன்னார் முலை மூழ்கி, . . . .

பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் எல்லா!

ஊடுவென் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,

கூடுவென் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே;

இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்,

நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின் எல்லா! . . . .

துனிப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,

தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே;

என ஆங்கு,

பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்

துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே . . . .

அறை போகும் நெஞ்சு உடையார்க்கு.

மருதக் கலி

← பாடல் 1795பாடல் 1797 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்