நூல்கள்›கலித்தொகை›பாடல் 1794

பாடல் 1794

திருந்திழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும்

பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது: ஒருநிலையே

மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல்,

அம் துகில் போர்வை அணிபெறத் தைஇ, நம்

இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக . . . .

தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்,

காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்

சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை,

தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே,

பாரா, குறழா, பணியா, 'பொழுது அன்றி, . . . .

யார், இவண் நின்றீர்?' எனக் கூறி, பையென,

வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,

'தையால்! தம்பலம் தின்றியோ?' என்று, தன்

பக்கு அழித்து, 'கொண்டீ' எனத் தரலும் யாது ஒன்றும்

வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி, . . . .

'கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' 'மற்று யான்

ஏனைப் பிசாசு; அருள்; என்னை நலிதரின்,

இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்'

எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப

முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது, . . . .

ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே,

கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே,

ஒடுங்கா வயத்தின், கொடுங் கேழ், கடுங்கண்,

இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்

ஏதில் குறு நரி பட்டற்றால்! காதலன் . . . .

காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம்

ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்

வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான்

வீழ்க்கைப் பெருங் கருங் கூத்து.

குறிஞ்சிக் கலி

← பாடல் 1793பாடல் 1795 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்