நூல்கள்›நற்றிணை›பாடல் 1420

பாடல் 1420

அஞ்சில்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்,

உடையோர் பன்மையின் பெருங் கை தூவா,

வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த

புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு

வாடா மாலை துயல்வர, ஓடி, . . . .

பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்

பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள்,

அழுதனள் பெயரும் அம் சில் ஓதி,

நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள்

ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா . . . .

நயன் இல் மாக்களொடு கெழீஇ,

பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே!

மருதம்

← பாடல் 1419பாடல் 1421 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்