நூல்கள்›நற்றிணை›பாடல் 1344

பாடல் 1344

மாமூலனார்

தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,

நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;

நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்

அகப்பா அழிய நூறி, செம்பியன்

பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது . . . .

அலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்து

மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,

இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென,

துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்

நெடு வரை விடரகத்து இயம்பும் . . . .

கடு மான் புல்லிய காடு இறந்தோரே.

பாலை

← பாடல் 1343பாடல் 1345 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்