நூல்கள்›நற்றிணை›பாடல் 1342

பாடல் 1342

கயமனார்

விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்

பாசம் தின்ற தேய் கால் மத்தம்

நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்

வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்

அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் . . . .

வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,

'இவை காண்தோறும் நோவர்மாதோ;

அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என

நும்மொடு வரவு தான் அயரவும்,

தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. . . .

பாலை

← பாடல் 1341பாடல் 1343 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்