நூல்கள்›நற்றிணை›பாடல் 1334

பாடல் 1334

அம்மூவனார்

கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்

நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,

தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,

அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,

'அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை . . . .

அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின்,

கொண்டும் செல்வர்கொல்- தோழி!- உமணர்

வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,

கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்

மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக் . . . .

கருங் கால் வெண் குருகு வெரூஉம்

இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?

நெய்தல்

← பாடல் 1333பாடல் 1335 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்