நூல்கள்›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›குறள் 2013

குறள் 2013

சீத்தலைச் சாத்தனார்

வானம் வாய்ப்பக் கவினி, கானம்

கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,

மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,

செம் புற மூதாய் பரத்தலின், நன் பல

முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் . . . .

செய்கை அன்ன செந் நிலப் புறவின்;

வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்

தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,

இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை

வாழை வான் பூ ஊழ் உறுபு உதிர்ந்த . . . .

ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு

கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை

கடுமான் தேர் ஒலி கேட்பின்,

நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே.

மணிமிடைபவளம்

← குறள் 2012குறள் 2014 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்