நூல்கள்›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›குறள் 1973

குறள் 1973

நன்பலூர்ச் சிறு மேதாவியார்

தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய

குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,

வான் எனப் பூத்த பானாட் கங்குல்,

மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்

தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ . . . .

வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,

ஐது படு கொள்ளி அங்கை காய,

குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி

சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,

முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் . . . .

கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்

வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து

ஆர்வம் சிறந்த சாயல்,

இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!

களிற்றியானை நிரை

← குறள் 1972குறள் 1974 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்