நூல்கள்›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›குறள் 1935

குறள் 1935

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

நகை ஆகின்றே தோழி! நெருநல்

மணி கண்டன்ன துணி கயம் துளங்க,

இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,

ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்

கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய . . . .

காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,

மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்

தண் துறை ஊரன் திண் தார் அகலம்

வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,

பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் . . . .

புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு,

எம் மனைப் புகுதந்தோனே; அது கண்டு

மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,

'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற

என்னும் தன்னும் நோக்கி . . . .

மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.

களிற்றியானை நிரை

← குறள் 1934குறள் 1936 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்