நூல்கள்›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›அகநானூறு›குறள் 1921

குறள் 1921

கபிலர்

மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்

கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்

செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,

தளிர் ஏர் மேனி, மாஅயோயே!

நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச . . . .

கோடை நீடிய பைது அறு காலை,

குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்

சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்

என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,

பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை . . . .

பல்லோர் உவந்த உவகை எல்லாம்

என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை

ஓங்கித் தோன்றும் உயர் வரை

வான் தோய் வெற்பன் வந்தமாறே!

களிற்றியானை நிரை

← குறள் 1920குறள் 1922 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்