நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1716

குறள் 1716

ஆசிரியர் அறியப்படவில்லை

சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,

துறுகட் கண்ணிக் கானவர் உழுத

குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,

விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,

கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் . . . .

'அணங்குடை அருஞ் சூள் தருகுவென்' என நீ,

'நும்மோர் அன்னோர் துன்னார் இவை' என,

தெரிந்து அது வியந்தனென் - தோழி! - பணிந்து நம்

கல் கெழு சிறுகுடிப் பொலிய,

வதுவை என்று அவர் வந்த ஞான்றே . . . .

குறிஞ்சி

← குறள் 1715குறள் 1717 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்