நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1687

குறள் 1687

குறமகள் குறியெயினி

நின் குறிப்பு எவனோ? - தோழி! - என் குறிப்பு

என்னொடு நிலையாதுஆயினும், என்றும்

நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே

சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,

பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் . . . .

பீலி மஞ்ஞை ஆலும் சோலை,

அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை

உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி,

நீர் அலைக் கலைஇய கண்ணிச்

சாரல் நாடனொடு ஆடிய நாளே . . . .

குறிஞ்சி

← குறள் 1686குறள் 1688 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்