நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1610

குறள் 1610

பரணர்

'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்

கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்

தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்

தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை

புலவாய்' என்றி - தோழி! - புலவேன் . . . .

பழன யாமைப் பாசடைப் புறத்து,

கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,

தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என்

நல் மனை நனி விருந்து அயரும்

கைதூவு இன்மையின் எய்தாமாறே. . . . .

மருதம்

← குறள் 1609குறள் 1611 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்