நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1599

குறள் 1599

எயினந்தை மகன் இளங்கீரனார்

குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்

பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்,

மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய,

அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்

செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி . . . .

திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும்,

பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார்,

சிறு பல் குன்றம் இறப்போர்;

அறிவார் யார், அவர் முன்னியவ்வே?

பாலை

← குறள் 1598குறள் 1600 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்