நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1589

குறள் 1589

கொற்றங் கொற்றனார்

யாங்குச் செய்வாம்கொல் - தோழி! - பொன் வீ

வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,

பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,

செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப்

பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, . . . .

சாரல் ஆரம் வண்டு பட நீவி,

பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி

அரிய போலக் காண்பேன் - விரி திரைக்

கடல் பெயர்ந்தனைய ஆகி,

புலர் பதம் கொண்டன ஏனற் குரலே? . . . .

குறிஞ்சி

← குறள் 1588குறள் 1590 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்