நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1577

குறள் 1577

பரணர்

தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்

கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,

அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,

எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்

கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ . . . .

நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,

நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்

விருந்து இறைகூடிய பசலைக்கு

மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே!

குறிஞ்சி

← குறள் 1576குறள் 1578 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்