நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1541

குறள் 1541

கோட்டியூர் நல்லந்தையார்

யார்க்கு நொந்து உரைக்கோ யானே - ஊர் கடல்

ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,

கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த

கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய

முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, . . . .

எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்

துறு கடற் தலைய தோடு பொதி தாழை

வண்டு படு வான் போது வெரூஉம்

துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?

நெய்தல்

← குறள் 1540குறள் 1542 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்