நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1488

குறள் 1488

வெள்ளைக்குடி நாகனார்

அம்ம வாழி, தோழி! நம்வயின்,

யானோ காணேன்- அதுதான் கரந்தே,

கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே;

கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே-

விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி . . . .

புகர் முக வேழம் புலம்பத் தாக்கி,

குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய்

வேங்கை முதலொடு துடைக்கும்

ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே.

குறிஞ்சி

← குறள் 1487குறள் 1489 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்