நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1474

குறள் 1474

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி

கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு,

போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில்

பேதை நெஞ்சம் கவலை கவற்ற

ஈங்கு ஆகின்றால்- தோழி!- பகுவாய்ப் . . . .

பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை,

அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக்

கரை அருங் குட்டம் தமியர் நீந்தி,

விரவு மலர் பொறித்த தோளர்

இரவின் வருதல் அறியாதேற்கே. . . . .

குறிஞ்சி

← குறள் 1473குறள் 1475 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்