நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1419

குறள் 1419

இளம் புல்லூர்க் காவிதி

கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்,

திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,

நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை

அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,

இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் . . . .

அகல் இலை அகல வீசி, அகலாது

அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,

பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,

இன்னும் வருமே- தோழி!- வாரா

வன்கணாளரோடு இயைந்த . . . .

புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே!

முல்லை

← குறள் 1418குறள் 1420 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்