குறள் 1338
ஆசிரியர் அறியப்படவில்லை
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் . . . .
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! . . . .
குறிஞ்சி