நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1333

குறள் 1333

இளங்கீரனார்

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்

பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,

கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,

கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்

வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் . . . .

சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை

உள்ளினென் அல்லெனோ, யானே- உள்ளிய

வினை முடித்தன்ன இனியோள்

மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

பாலை

← குறள் 1332குறள் 1334 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்