நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›கற்பியல்›பிரிவாற்றாமை

1.பிரிவாற்றாமை

10 குறள்கள்

1151விளக்கம் →

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

1152விளக்கம் →

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு.

1153விளக்கம் →

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்.

1154விளக்கம் →

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு.

1155விளக்கம் →

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.

1156விளக்கம் →

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.

1157விளக்கம் →

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.

1158விளக்கம் →

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு.

1159விளக்கம் →

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

1160விளக்கம் →

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.

படர்மெலிந்திரங்கல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்