நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›குடிமை

1.குடிமை

10 குறள்கள்

951விளக்கம் →

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு.

952விளக்கம் →

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.

953விளக்கம் →

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு.

954விளக்கம் →

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.

955விளக்கம் →

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று.

956விளக்கம் →

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற

குலம்பற்றி வாழ்தும் என் பார்.

957விளக்கம் →

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

958விளக்கம் →

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.

959விளக்கம் →

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

960விளக்கம் →

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு.

மானம் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்