நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›படைமாட்சி

4.படைமாட்சி

10 குறள்கள்

761விளக்கம் →

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை.

762விளக்கம் →

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக் கல்லால் அரிது.

763விளக்கம் →

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.

764விளக்கம் →

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை.

765விளக்கம் →

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை.

766விளக்கம் →

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு.

767விளக்கம் →

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து.

768விளக்கம் →

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும்.

769விளக்கம் →

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.

770விளக்கம் →

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.

← பொருள்செயல்வகைபடைச்செருக்கு →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்