நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›பாயிரவியல்›விருந்தோம்பல்

5.விருந்தோம்பல்

10 குறள்கள்

81விளக்கம் →

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

82விளக்கம் →

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.

83விளக்கம் →

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

84விளக்கம் →

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

85விளக்கம் →

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

86விளக்கம் →

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு.

87விளக்கம் →

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

88விளக்கம் →

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

89விளக்கம் →

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

90விளக்கம் →

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குநழ்யும் விருந்து.

← அன்புடைமைஇனியவைகூறல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்