தமிழ் இலக்கியம்Tamil Literature

தேடல்

பொருள் தேடல் — Search by meaning

சொல் தேடல் — Keyword search

"நட்பு" — 50 results

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

வாழ்க்கைத் துணைநலம் · குறள் 19காண்க →

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

அன்புடைமை · குறள் 74காண்க →

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.

செய்ந்நன்றி அறிதல் · குறள் 106காண்க →

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.

செய்ந்நன்றி அறிதல் · குறள் 107காண்க →

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

நடுவு நிலைமை · குறள் 111காண்க →

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.

நடுவு நிலைமை · குறள் 118காண்க →

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.

புறங்கூறாமை · குறள் 187காண்க →

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.

பயனில சொல்லாமை · குறள் 192காண்க →

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.

நிலையாமை · குறள் 338காண்க →

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.

அமைச்சு · குறள் 381காண்க →

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு.

வினைசெயல்வகை · குறள் 425காண்க →

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.

அவையஞ்சாமை · குறள் 477காண்க →

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.

வினைத்திட்பம் · குறள் 661காண்க →

எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.

வினைத்திட்பம் · குறள் 670காண்க →

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

பொருள்செயல்வகை · குறள் 759காண்க →

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

படைச்செருக்கு · குறள் 781காண்க →

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு.

படைச்செருக்கு · குறள் 782காண்க →

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.

படைச்செருக்கு · குறள் 783காண்க →

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்செனறு இடித்தற் பொருட்டு.

படைச்செருக்கு · குறள் 784காண்க →

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.

படைச்செருக்கு · குறள் 785காண்க →

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.

படைச்செருக்கு · குறள் 786காண்க →

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.

படைச்செருக்கு · குறள் 787காண்க →

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

படைச்செருக்கு · குறள் 788காண்க →

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.

படைச்செருக்கு · குறள் 790காண்க →

நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

நட்பாராய்தல் · குறள் 791காண்க →

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

நட்பாராய்தல் · குறள் 792காண்க →

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு.

நட்பாராய்தல் · குறள் 793காண்க →

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

நட்பாராய்தல் · குறள் 794காண்க →

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

நட்பாராய்தல் · குறள் 795காண்க →

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.

நட்பாராய்தல் · குறள் 797காண்க →

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

நட்பாராய்தல் · குறள் 798காண்க →

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்.

நட்பாராய்தல் · குறள் 799காண்க →

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.

நட்பாராய்தல் · குறள் 800காண்க →

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பழைமை · குறள் 801காண்க →

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு

உப்பாதல் சான்றோர் கடன்.

பழைமை · குறள் 802காண்க →

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை.

பழைமை · குறள் 803காண்க →

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

பழைமை · குறள் 806காண்க →

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர்.

பழைமை · குறள் 807காண்க →

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாளிழுக்கம் நட்டார் செயின்.

பழைமை · குறள் 808காண்க →

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு.

பழைமை · குறள் 809காண்க →

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.

தீ நட்பு · குறள் 811காண்க →

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்?

தீ நட்பு · குறள் 812காண்க →

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.

தீ நட்பு · குறள் 813காண்க →

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

தீ நட்பு · குறள் 815காண்க →

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.

தீ நட்பு · குறள் 816காண்க →

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்.

தீ நட்பு · குறள் 817காண்க →

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.

தீ நட்பு · குறள் 819காண்க →

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு.

தீ நட்பு · குறள் 820காண்க →

சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை

நேரா நிரந்தவர் நட்பு.

கூடாநட்பு · குறள் 821காண்க →

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.

கூடாநட்பு · குறள் 822காண்க →